Categories
தேசிய செய்திகள்

முதுகலை மருத்துவ படிப்புக்கு இனி இந்த தேர்வு கிடையாது?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

மருத்துவ மாணவர்களுக்கு தற்போது நெக்ஸ்ட் எனப்படும் தகுதி தேர்வு அறிமுகமாக உள்ளதால் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடுத்த வருடம் முதல் இருக்காது என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு நடத்துவதற்கு தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பை முடிப்போர் மருத்துவ பணியாற்றுவதற்கான தகுதி தேர்வாக இது இருக்கும். அதேசமயம் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்போருக்காக நடத்தப்படும் வெளிநாட்டு மாணவர் தகுதி தேர்வுக்கு மாற்றாகவும் நெக்ஸ்ட் தேர்வு இருக்கும் என்பதால் 2024-2025முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் நடக்கும் நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் நீட் தேர்வு தான் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான கடைசி நுழைவுத் தேர்வாக இருக்கும் எனவும் நெக்ஸ்ட் தேர்வு தொடர்பான நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இதை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது வரை தகவல் மட்டுமே வெளியாகி உள்ளது.

Categories

Tech |