Categories
தேசிய செய்திகள்

முதியோர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…… உயர்த்தப்பட்ட உதவித்தொகை….. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஏழாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை உதவி தொகைகளுக்காக விண்ணப்பித்த முதியோர், விதவை உள்ளிட்டவர்களுக்கு இது வரை அரசு உதவி தொகை வழங்காமல் உள்ளது. அவர்களின் விண்ணப்பம் எந்த நிலையில் கூட உள்ளது என்று தெரியவில்லை. மேலும் பயனாளிகள் சிரமப்படுவதாகவும் கேள்விகள் எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் முதியோர், விதவை உள்ளிட்ட அனைத்து உதவி தொகைகளும் பெற இதுவரை 15 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 100 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு உதவி தொகை ரூ.7000 வழங்கப்படும் என்றும் 90 வயது முதல் 100 வயதிற்குள் உள்ள முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.3500 உதவித்தொகையை ரூ.4000 உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

Categories

Tech |