Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….?? 9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை….. போலீஸ் அதிரடி…!!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவிகள், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால் அதிகாரிகள் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் நபர்களை போலீசார் கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சாலையில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |