16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சுப்புராஜ் நகர் புதுக்காலனியில் ராஜேந்திரன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ராஜேந்திரன் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.