Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முதியவர் அடித்து கொலை…. இரட்டை சகோதரர்களின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

முதியவரை கொலை செய்த இரட்டை சகோதரர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டு காட்டு தெருவில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தண்டபாணி(54), ராமச்சந்திரன்(54) என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரட்டை சகோதரர்கள் ஆவர். கடந்த 2018- ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உறவினரான பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யாறு(75) என்பவர் இருவரையும் விலக்கி விட முயன்றுள்ளார்.

அப்போது நீதான் தகராறுக்கு காரணம் என கூறி சகோதரர்கள் அய்யாறுவை செங்கலால் தாக்கினர். இதனால் படுகாயமடைந்த அய்யாறு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தண்டபாணி, ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இரட்டை சகோதரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |