ஜெனிவாவில் முதியவர்களை குறிவைத்து நடக்கும் மோசடி தொடர்பாக அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
ஜெனிவாவில் முதியவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் பணமோசடி செய்யும் நிகழ்வு அம்பலமாகியுள்ளது. அதாவது மர்ம நபர்கள் குறிவைக்கும் நபர்களிடம் தொலைபேசியில் அழைப்பு விடுத்து தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறுவார்களாம்.
மேலும் நீங்களோ அல்லது உங்களது உறவினர்களோ போக்குவரத்து விதியை மீறி விட்டீர்கள் என்று கூறி அபராதம் செலுத்தும்படி நிபந்தனை செய்வார்களாம். இந்த தொலைப்பேசி மோசடியில் மொத்தமாக 8,00,000 சுவிஸ் பிராங்குகள் வரை ஏமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகையினால் எவரும் குறிப்பாக முதியவர்கள் இவ்வாறு தொலைபேசி மூலம் பணம் கேட்டு யாராவது தொடர்பு கொண்டால் உடனே காவல் நிலையத்தில் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்கள். மேலும் தாங்கள் இவ்வாறு தொலைபேசியில் பணம் எதுவும் கேட்பதில்லை என்றும் போலீஸ் தெரிவித்துள்ளார்கள்.