பிரான்சில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வெளியில் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்த நிலையில் தற்போது பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனாவும் பிரான்சில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரான்சில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் முதியவர்கள் தாங்கள் வசிக்கும் முதியோர் இல்லங்களில் இருந்து வெளியே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பை சுகாதார அமைச்சரான olivier Veran தெரிவித்துள்ளார். அதாவது அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படவுள்ளது.
ஆனால் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தியவர்கள் 15 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் எடுத்துக் கொண்டால் மட்டுமே அவர்கள் விருப்பப்படி வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இதனை அறிந்த முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.