மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வழிமறித்து 4 பவுன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை காதகிணறு சாஸ்திரி நகரில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து கொண்டு இருந்த மர்மநபர்கள் சிலர் முருகையாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து ஒத்தக்கடை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.