தமிழக அமைச்சரவை கூட்டம் அதிகன மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதன் காரணமாக நாளை நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் நவம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.