சல்மான்கானுடன் ஜோடியாக நடித்த மேகா ஆகாஷ் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
மேகா ஆகாஷ் தமிழில் நடித்த முதல் திரைப்படம் “ஒரு பக்க கதை” இது இன்னும் ரிலீசாகவில்லை என்றாலும் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தால் அவரின் புகழ் வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து சிம்பு-தனுஷ் ஆகியோருடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்த மேகா ஆகாஷீக்கு இப்பொழுது பாலிவுட்டில் சல்மான்கானுக்கு ஜோடியாக “ராதே” என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தநிலையில் மேகா ஆகாஷ், தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.
அதில், சல்மான்கானுடன் இணைந்து நடிக்கும் போது எனக்கு முதலில் நடுக்கம் ஏற்பட்டது. நான் சென்ற முதல் நாளிலேயே சகஜ நிலைக்கு என்னை மாற்றிவிட்டார்கள். சல்மான் எனக்கு “பீயிங் ஹ்யூமன்” வாசகம் பொறித்த டீ-சர்ட்டை பரிசளித்தார்.நாங்கள் திரைப்படத்தில் நடித்த ஆக்சன் காட்சிகளையும், சல்மான்கான் நடத்திவரும் அறக்கட்டளை குறித்தும் பேசிக்கொண்டிருப்போம். படத்தில் சல்மான்கான் ஆக்சன் காட்சி அனைத்தையும் அசத்தியுள்ளார் என்று மேகா ஆகாஷ் தெரிவித்தார்.