காஜல் அகர்வால் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டு திருமணநாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது காதலர் கௌதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி தற்போது 1 வருடம் முடிந்துள்ளது.
இதையடுத்து காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில் நான் உங்களை நேசிக்கிறேன். உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன் முதலாம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். காஜல் அகர்வாலுக்கு வலைதளங்களில் ரசிகர்கள் திருமணநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.