Categories
மாநில செய்திகள்

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு…. கல்வி உதவித்தொகை…. முக்கிய மாற்றம்…!!!

தமிழக சட்டப்பேரவையில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

அதன்படி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி என்பதற்கு பதில் முதல் தலைமுறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். 259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.50 கோடி செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும். 40 விடுதிகளுக்கு ரூ.10 லட்சம் செலவில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |