தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்-ஐ நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66வது படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சூட்டிங் நடைபெற்று வருகின்றது.
@actorvijay met @TelanganaCMO #KCR at Hyderabad today @trspartyonline #Vijay pic.twitter.com/EByWmgbF4Q
— Ireddy Srinivas Reddy (@ireddysrinivasr) May 18, 2022
இந்நிலையில் நடிகர் விஜய் மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்-ஐ இன்று சந்தித்து பூங்கொத்து வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.