Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் விசிட்… அடுத்தடுத்து பறக்கும் உத்தரவு…. திமுகவில் திடீர் திருப்பம்…..!!!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை  வெற்றி பெற்று இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த அளவு திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கொங்கு மண்டலத்தை திமுக கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருவதாக அதிமுக மற்றும்  பாஜக உள்ளிட்ட கட்சியினர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.இந்த பிரச்சாரத்தை முறியடிக்கும்வகையில் கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்து தமிழக முதல்வரின் சுற்றுபயண திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது்.

இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின் தென் மாவட்டமான நெல்லையில் விசிட் அடித்ததால் திமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் ஸ்டாலின் நெல்லை, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட நிர்வாகிகளை அடுத்தடுத்து சந்தித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இடையே உரசல்கள், உட்கட்சி பூசல் குறித்து ஆலோசிக்கிறார். அப்போது சிலரை கட்சியை விட்டு நீக்கவும் மாற்று கட்சியினரை இணைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |