முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (20-06-2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21-06-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.