Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….. நாளை இரவு 8 மணிக்கு ரெடியா இருங்க…!!!!!

முதல்வர் ஸ்டாலின் நாளை இரவு  8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் (Twitter Space) உரையாற்றவுள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை இரவு 8 மணிக்கு திமுக தொழில் நுட்ப பிரிவு சார்பாக ட்விட்டர் ஸ்பேசில் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் செப்டம்பர் மாதத்தில் பிறந்த காரணத்தாலும் அதே மாதத்தில் தான் திமுக தொடங்கப்பட்டதாலும் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று திமுக சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாடும் வகையில் ட்விட்டர் ஸ்பேஸில் திராவிடத்தை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில், நாளையுடன் செப்டம்பர் மாதம் நிறைவடைவதால் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நாளை ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றுகிறார்.

Categories

Tech |