நடிகர் வடிவேலு நடிப்பதற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இனிவரும் காலங்களில் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் புதிய திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், என்னுடைய வாழ்வில் பெரிய சூறாவளி அடித்தது. அது போன்ற துன்பத்தை யாரும் இதுவரை சந்தித்திருக்க முடியாது.
மக்கள் அனைவரையும் இன்னும் மகிழ்ச்சியாக சிரிக்க வைத்துவிட்டு தான் என் உயிர் இந்த பூமியை விட்டு செல்லும். என்னுடைய நண்பன் விவேக்கின் மறைவு நாட்டிற்கும் திரையுலகிற்கு மிகப்பெரிய பேரிழப்பு. விவேக்கின் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாள் முதல் எனக்கு பிரகாசமான சூழல் அமைந்துள்ளது. தற்போது எல்லாமே நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.