Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து…. ரூ.5 லட்சம் நிவாரணம் கொடுத்த நடிகர் வடிவேலு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதல்வர்   முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிவாரணம் வழங்க கோரி முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கிணங்க அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் வடிவேலு, கொரோனா நிவாரண நிதியாக ரூ 5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் கொரோனாவை முதல்வர் கட்டுப்படுத்தி உள்ளார். அனைவரும் முன்வந்து உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் கொங்கு நாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் நல்லா இருக்கிற தமிழ் நாட்டை பிரிக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |