Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு…. “நான் அதைப் பற்றி அவரிடம் பேசவில்லை”…. மம்தா பானர்ஜி ஓபன் டாக்….!!!!

மணிப்பூர் மாநில ஆளுநராகவும் மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் இவரின் மூத்த சகோதரி 80 வது பிறந்த நாள் விழா நாளை சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார். மேலும் 2 நாள் பயணமாக சென்னை வரும் மம்தா பானர்ஜி ஸ்டாலின் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று மாலை சென்னை விமான நிலையம் அந்த மம்தா பானர்ஜி விமான நிலையத்தில் அமைச்சர்கள் தா.மோ‌.அன்பரசன், மா. சுப்பிரமணியன் வரவேற்றனர். இதனை எடுத்து முதல்வர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு மம்தா பானர்ஜி சென்றார். இந்த சந்திப்பின் போது, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி, ஸ்டாலினுடன் அரசியல் பேசவில்லை. தேர்தல், அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்கத்துக்கு வருமாறு மம்தா பானர்ஜி முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்டேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |