Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு …!!

தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை கூட்டம் சற்று நேரத்திற்கு முன்னதாக தான் முடிவடைந்திருக்கிறது. பரபரப்பாக இரண்டு மணி நேரம் முதல்வர், துணைமுதல்வர் என இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றது. மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரிடம் ஆலோசனை நடத்தினர். தற்போது முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியே வந்து கொண்டு இருக்கின்றார்கள்.

சட்டமன்ற தேர்தலில் கட்சியை  முதல்வர் வேட்பாளர் யார் என்ற முக்கிய விவாதம் இன்று நடைபெற்றுள்ளது. என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் ? என்ற அந்த அறிவிப்பு அறிக்கை மூலமாகவோ அல்லது செய்தியாளர்களை சந்திக்கும்போதோ தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.  குறிப்பாக மூத்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளரை சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது.

Categories

Tech |