Categories
தேசிய செய்திகள்

முதல்வர் பினராயி விஜயன் இதற்காகத்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்?…. ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு….!!!!!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மாநிலத்தில் மக்களுக்காக அல்ல தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக திட்டங்களை உருவாக்கி வருகிறார் என கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, முதல்வரின் திட்டங்கள் தேவையற்ற கமிஷன்களை உருவாக்கி, தன் மகளுக்காகவோ (அல்லது) அவரது குடும்பத்திற்காகவோ (அல்லது) அவரது குடும்பத்தின் எதிர்கால சந்ததியினருக்காகவோ வளர்ச்சி எனும் வேஷத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறது.

இவை கேரளாவின் FONஆக இருக்கக் கூடாது, கேரள பைபர் ஆப்டிகல் நெட்வொர்க்காக இருக்கக்கூடாது, வீணா (அல்லது) விஜயன் பைபர்  ஆப்டிகல் நெட்வொர்க்காக இருக்கவேண்டும்.  இது மாநிலத்தின் வளர்ச்சிக்காகவோ, நமது வருங்கால சந்ததியினரின் மேம்பாட்டிற்காகவோ (அ) பொருளாதார வளர்ச்சிக்காகவே அல்ல, மாறாக அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக என நான் நம்புகிறேன்.

 

 

Categories

Tech |