சென்னை மற்றும் சேலத்தில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார்.
அதன் பிறகு நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். அவரின் வருகையை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து சென்னை, சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதனால் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக திருப்பூரில் ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.