தமிழக முதல்வர் பழனிசாமி பயணம் செய்த விமானத்திலிருந்து கைக் குழந்தையுடன் பெண் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். அதனால் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்கு டெல்லி பயணம் சென்றிருந்தார்.
அப்போது முதல்வர் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்திலிருந்து கைக் குழந்தையுடன் பெண் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. லட்சுமி தேவி என்ற 30 வயதுடைய பெண் 4 மாத குழந்தையுடன் டெல்லிக்குச் செல்ல தயாராக இருந்தார். அப்போது திடீரென்று குழந்தை வீல் வீல் என்று அழுதது. இதனையடுத்து கைக் குழந்தையுடன் தாய் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். சென்னை விமான நிலைய வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இதுவே முதல் முறையாகும்.