Categories
தேசிய செய்திகள்

முதல்வர் பதவியில் அமரும் நிதிஷ்குமார்… முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து…!!!

பீகாரில் முதல்-மந்திரியாக பதவியேற்கும் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று பதவி ஏற்பு விழா மாலை நடைபெறுகிறது. நிதிஷ் குமார் மற்றும் அவரின் மந்திரிசபையில் இடம் பெறுகிற பிற மந்திரிகளுக்கும் கவர்னர் பாகு சவுகான் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பீகாரின் முதல் மந்திரியாக பதவி ஏற்க உள்ள நிதீஷ்குமாருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பீகாரில் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். நான்காவது முறையாக சாதனை படைத்த உங்களுக்கு ஒரு வெற்றிகரமான பதவிக்காலத்தை விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்

Categories

Tech |