தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தது குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் மிஸ்கின்.
தமிழ் சினிமா உலகில் தனித்துவமாக இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குனர் மிஸ்கின். இவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கினார். பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்த பாண்டியராஜனை, என்னை அஞ்சாதே திரைப்படத்தின் வாயிலாக வில்லனாக நடிக்க வைத்தார்.
மென்மையான நடிகரான சேரனை ஆக்ஷன் நாயகனாக மாறினார். இவர் எல்லா படங்களிலும் தனித்துவமான விஷயங்களை மேற்கொள்கிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சைக்கோ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இன்று எனக்கு முதல்வரை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதல்வர் என்னிடம் நலம் விசாரித்தார். பின்பு சிரித்தபடியே என்னிடம் எங்கள் ஆட்சி எப்படி இருக்கிறது மிஸ்கின் என்று கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். எதிர்க்கட்சிகளே உங்களைப் போற்றுகிறார்கள் அனைவரும் உங்களை மனதார பாராட்டுகிறார்கள் என்றேன். அதற்கு அவர் தமிழக மக்களுக்கு இன்னும் நான் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணி நினைத்து கொண்டிருக்கிறேன் என்றார். பின்பு நான் முதல்வர் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கிளம்பினேன்” என்று பதிவிட்டுள்ளார்.