Categories
அரசியல்

முதல்வரே இதை பண்ணுங்க…. மக்கள் கஷ்டப்படுறாங்க…. ஓபிஎஸ் வைத்த கோரிக்கை…!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, “மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது 2021- 22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில்  19,420 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது ஆட்சி செய்து வரும் திமுக அரசானது திருத்திய நிதிநிலை அறிக்கையில் 18,933 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே சுமார் 487 கோடி ரூபாய் குறைத்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் ஊடுகதிர் படங்கள் அதாவது எக்ஸ்ரேயை  வெள்ளைத்தாளில் பதிப்பித்து மக்களுக்கு கொடுக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே முடிவுகளானது வெள்ளைத்தாளில் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்  நிதி பற்றாக்குறையால் தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு தருவதாகும், இப்படி தரப்படும் முடிவுகள் தெளிவாக இல்லாததால் வேறு மருத்துவமனை சென்று தங்களது நோய் குறித்து இரண்டாவது கலந்தாலோசிக்க முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில்  மருத்துவர்களுக்கு படச்சுருளின் முடிவுகளானது வாட்ஸ்அப் மூலமாக பகிரபடுவதாக  தகவல் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து மருத்துவ வட்டாரங்களில் படச்சுருளில் முடிவுகளை வழங்கினால் அதற்கு 50 ரூபாய் செலவாகும் என்பதால் வெள்ளைத் தாளை எடுத்து தருவதாக கூறி வருகின்றனர். எனவே அரசாங்கமானது நிதி பற்றாக்குறையை கருத்தில் வைத்து எக்ஸ்ரே பதிவுகளை வெள்ளைத்தாளில் கொடுக்கப்படுவது நிறுத்த வேண்டும். ஏனெனில் மக்கள் வேறொரு மருத்துவரிடம் தங்களது நோய் குறித்து இரண்டாவது கருத்து வாங்குவது சிரமாக  உள்ளது. ஆகவே பொதுமக்களுக்கு  எக்ஸ்ரே முடிவுகளுக்கு படச்சுருள் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை குறித்து தமிழக அரசு உடனே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படச்சுருளில் எக்ஸ்ரே முடிவுகளை வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” குறிப்பிடப்பட்டு இருந்தது.

Categories

Tech |