Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வருக்கு நன்றி….. ”தை பூசத்துக்கு லீவ் விடுங்க”….. சீமான் கோரிக்கை …!!

தை பூசத்துக்கு அரசு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று முதலவர் சந்திப்புக்கு பின் சீமான் பேட்டியளித்தார்.

இன்று தமிழக முதல்வரை இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , 5 , 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்தோம். தமிழ்  கடவுள் முருகரின் தைப்பூச விழாவில் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

கிருஷ்ண ஜெயந்தி  , விநாயகர் சதுர்த்தி , ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை , குருநானக் ஜெயந்தி , மகாவீரர் ஜெயந்தி ,  ஓணம் பண்டிகை என அனைத்திற்கும் பொது விடுமுறை இருக்கின்றது. தைப்பூசத்திற்கு ஒரு இஸ்லாமிய நாடு என்று அழைக்கப்படும் மலேசிய நாடு கூட அரசு விடுமுறை விடப்படுகின்றது.

எனவே முப்பாட்டன்முருகப்பெருமானுக்கு பொது விடுமுறை வேண்டுமென்று நாங்கள் தொடர்ச்சியாக நாங்க கேட்டு வருகிறோம்.ஹட்ரோ கார்பன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை ,  மக்களின் கருத்து கேட்பபு தேவை இல்லை என்பதை மாற்றி தஞ்சையை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்என்கிற கோரிக்கை  வலியுறுத்தியுள்ளோம். முதல்வர் பரிசீலிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |