உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும், 2 துப்பாக்கிகளும் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோரக்பூரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் தங்க நகைகளும் யோகி ஆதித்யநாத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ரூ.49 ஆயிரம் மதிப்பிலான தங்க செயின் உள்ளதாகவும் மனு தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் தங்க நகைகளின் மதிப்பு ரூ. 26 ஆயிரம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ரொக்கமாக ரூ.1 லட்சம் கையில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எஸ்பிஐ வங்கி கணக்கில் 25 லட்சத்து 99 ஆயிரத்து 170 ரூபாய் இருப்பதாகவும், வாகனங்கள், விவசாயம் சாராத மற்றும் சார்ந்த நிலம் எதுவும் தன்னிடம் இல்லை என்று யோகி ஆதித்யநாத் பிராமணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.