Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரா இல்லை…. மந்திரவாதியா புரியல… அண்ட புளுகு, ஆகாச புளுகு… ஸ்டாலின் கடும் தாக்கு …!!

நேற்று திருப்பூரில் பேசிய திமுக தலைவர், முதல்வர் லட்சம், கோடி திட்டங்களை கொண்டு வருவாராம். லட்சக்கணக்கான பேருக்கு வேலை குடுப்பாராம், அவர்  முதலமைச்சர் பழனிச்சாமியா… ? இல்ல மந்திரவாதி பழனிச்சாமியா புரியல. அதிமுக அரசு உருவானது முதல் சொல்லப்பட்ட அனைத்தும் வாய் ஜாலம் தான். ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தபோ தமிழகத்துக்கு விஸன் 2020என்ற ஒரு திட்டத்தை அறிவிச்சாரு. 2012ஆம் ஆண்டு அந்த புதிய கொள்கையை வெளியிட்டார்.

அதை இப்போது படிச்சாலும் புல் அரிக்குது. அதுல சொல்லியிருக்கிறார், தனிநபர் வருமானத்தை உயர்த்துவேன். 15 லட்சம் கோடிக்கு உள்கட்டமைப்பு திட்டங்கள், இரண்டு கோடி பேருக்கு வேலைகள், தமிழ்நாட்டுல இரண்டு மருத்துவ நகரங்கள் உருவாக்கப்படும் என சொன்னது இந்த  ஒன்பது வருடங்களில் அதிமுக அரசில் நிறைவேற்றல. முதல் உலக முதலீட்டாளர் மாநாடு 2015இல்  ஜெயலலிதா நடத்தினார். 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக  அறிவிச்சாரு.

இரண்டு லட்சத்து நாற்பத்து இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கப்பட்டு இருக்கிறது அப்படின்னு சொன்னாரு. நாலு லட்சத்தி அறுபத்தி ஒன்பது ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க போகுது அப்படின்னு சொன்னாரு. அந்த மாநாடு பற்றி இது வேற எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடல. இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை பழனிச்சாமி நடத்தினார்.

304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொன்னாரு. மூன்று லட்சத்தி நானூற்றி முப்பத்தி ஒரு கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக சொன்னார். பத்து லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வேலை கொடுக்க போறதாக அறிவிச்சாரு. ஆனால் ஒன்று நடந்ததா, தெரியல. முதலமைச்சர் பழனிச்சாமி  13நாட்கள் வெளிநாடு சுற்றுலா போனாரு. அங்க போய் 41புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொன்னாரு.

எட்டாயிரத்து எண்ணூற்றி முப்பத்தி ஐந்து கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்படும்  அப்படின்னு சொன்னாரு. முப்பத்தி ஐந்தாயிரத்து ஐநூத்தி இருபது பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் சொன்னாரு. முதலீடும் இல்ல, வேலையும் இல்ல.

கொரோனா காலத்துல 101 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக சொன்னாரு, எண்பத்தி எட்டாயிரத்து எழுநூற்று இருபத்தி ஏழு கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் அப்படின்னு சொன்னாரு . ஒரு லட்சத்து ஏழாயிரம் பேருக்கு வேலை கிடைக்க போகுது அப்படின்னு சொன்னாரு, இதுவும் தோல்வி தோல்வி தோல்விதான்.

இப்போது புதிய  தொழில் கொள்கை 2021 அப்படின்னு வெளியிட்டு இருக்காரு. பத்து லட்சம் கோடி முதலீடு திரட்ட போறாராம், இருபது லட்சம் பேருக்கு வேலை கொடுக்க போறாராம். இந்த கொள்கையை அறிவிச்சிட்டு பேசிய முதல்வர் முதலீடுகளை ஈர்க்கும் சரணாலயமாக தமிழ்நாடு திகழும் அப்படினு அண்ட புளுகு ஆகாச புளுகு கூறியிருக்கிறார். ஆனால் உண்மை என்ன ? ஊழலின் சரணாலயமாக தமிழ்நாட்டை மாத்திட்டாரு முதல்வர் என ஸ்டாலின் விமர்சித்தார்.

Categories

Tech |