மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக மாறியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் இலவச திருமண திட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகளுக்கான திருமணம் இன்று நடைபெற்றது . இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார் .
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கோவில்களில் திருமணம் நடத்துவதாகவும், முதல்வர் மு. க ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் காலம் பொற்காலமாக மாறிவிட்டது என்றும் பெருமையாக கூறியுள்ளார்.