சசிகலாவுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அதிமுக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கும் என்பது பலரிடமும் எழுந்த கேள்வி. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் இன்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா வெளியில் வந்தால் அவர் தான் முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடும் என்று சிலர் சமூக வலைத்தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து அதிமுக கட்சியின் மூத்த தலைவரான பொன்னையன் கூறுகையில், “சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் எங்கள் கட்சியே இல்லை. எனவே அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என அதிரடியாக கூறியுள்ளார்.