தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை சீண்டி பார்ப்பதையே தன் வேலையாக கொண்டுள்ளார். தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என பகிரங்கமாக அறிவித்தார். அதன் பின்னர் நடைபெற்ற கவுன்சிலில் பங்கேற்கவில்லை.அதற்கு பதிலாக தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட சமூக வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கியத்துவத்தை சுக்குநூறாக உடைத்தார். அதோடு இல்லாமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை துறை ரீதியாக விமர்சித்து கடுப்பேற்றி வருகிறார் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்.
இதன் விளைவு மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை. தமிழகத்தில் பருவ மழையின் தாக்கத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 20 ஆயிரம் கிராமங்கள் சின்னாபின்னமாயின. இதனால் ஏற்பட்ட சேதத்தை ஈடு செய்ய தமிழக அரசுக்கு 6,200 கோடி தேவைப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கூறியிருந்தது ஆனால் மத்திய அரசு சார்பில் வந்து ஆய்வு செய்த குழுவினர் அதனை பார்த்துவிட்டு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை. இதற்கெல்லாம் காரணம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு தான் என்று மறைமுகமாக கூறியுள்ளது மத்திய அரசு. எனவே தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கினால் மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதி சரியாக கிடைக்கும் என டெல்லியிலிருந்து முதல்வருக்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் செய்வதறியாது இருக்கிறார் முதலமைச்சர்.