இந்திய விமான படை அணிவகுப்பில் முதன் முறையாக ரபேல் போர் விமானங்கள் பங்கேற்க உள்ளதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இந்திய ராணுவத்திற்கு மேலும் வலிமை சேர்க்க கூடிய விதமாக, ரபேல் போர் விமானங்கள் தற்போது வாங்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் இருக்கின்ற டசால்ட் ஏவியேசன் என்ற நிறுவனத்திடம் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 10 ஆம் தேதி இந்திய விமானப்படையில் இந்த விமானங்கள் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளன.இந்த விமானங்கள் தற்போது லடாக் மற்றும் தே பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்திய விமானப்படை தினம் வருகின்ற எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதில் ரபேல் போர் விமானம் கலந்து கொள்கிறது. விமானப்படை அணிவகுப்பில் ரபேல் போர் விமானம் முதல் முறையாக பங்கேற்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ரபேல் விமானங்கள் விண்ணில் சீறிப் பாய்ந்து செய்யும் சாகசங்களை பார்வையாளர்கள் அனைவரும் காண இயலும்.அந்த விமானங்கள் கிட்டத்தட்ட ஐந்து தலைமுறை வகையைச் சேர்ந்த போர் விமானங்கள். அந்த விமானத்தில் இரட்டை எஞ்சின் சக்தி உள்ளது. அது மட்டுமன்றி அந்த விமானத்தில் இடை மறிப்பு, வான்வெளி உளவு, தரை ஆதரவு, துல்லிய தாக்குதல், எதிரிகளின் இலக்குகளை கண்டறியும் வகையிலான ரேடார் கருவிகள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன.