சூர்யாவுடன் இணைந்து நடிப்பது குறித்து கூறியுள்ளார் கீர்த்தி ஷெட்டி.
தெலுங்கு படம் மூலம் பிரபலமான கீர்த்தி ஷெட்டி தற்போது பாலா இயக்கும் சூர்யா நடிக்கும் சூர்யா-41வது திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்கின்றார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமாரியில் நடந்து வருகின்ற நிலையில் படத்தில் நடிப்பது குறித்து பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, லிங்குசாமி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். தமிழ் மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படங்களில் நடிக்கும்போது நன்றாக தமிழ் பேச வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய புகைப்படம் ஒன்றை பார்த்தவுடன் பாலா சாருக்கு பிடித்திருந்தது.
சென்னை வந்து அவரை சந்தித்தேன். என் கதாபாத்திரம் மிகவும் அழகானது. அதேசமயம் சவாலானது கூட. ஆனால் எனக்கு சவால்கள் பிடிக்கும் என்பதால் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு பிடித்த நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். அவருடைய பல திரைப்படங்களை நான் பார்த்து இருப்பதால் அவரின் மேல் எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. நான் அவரின் தீவிர ரசிகை. இந்நிலையில் முதல் நாள் படப்பிடிப்பில் அவருடன் இணைந்து நடிப்பதில் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியவில்லை” என கூறியுள்ளார். கீர்த்தி ஷெட்டி ஏப்ரல் 3ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்ளப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.