Categories
உலக செய்திகள்

முதலில் பேஸ்புக்… இப்போ இது…. 50 கோடியில் நீங்களும் ஒருவர்?… அதிர்ச்சி தகவல்…!!!

ஃபேஸ்புக்கை தொடர்ந்து பிரபல சமூக ஊடகமான லிங்க்ட்இன் பயனர்கள் 50 கோடிப் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் 53 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் உங்கள் கணக்கின் தகவலும் லீக்காகி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள https://haveibeenpwned.com/உதவுகிறது. இந்த இணையத்தில் சென்று நமது ஈமெயில் அல்லது போன் நம்பரை அடித்தால் லீக்கான தகவலுடன் ஒப்பிட்டு நமக்கு சொல்லி விடும்.

இதனையடுத்து பிரபல சமூக ஊடகமான லிங்க்ட்இன் (inkedln) பயனர்கள் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சைபர் நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. பெயர், இமெயில், தொலைபேசி எண், அலுவலக விவரம், ஐஐடி மற்றும் பிற சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்ட தகவல்களை ஹேக்கர்கள் குழு திருடி ஆன்லைனில் விற்பனைக்கு வைத்துள்ளது. எனினும் தனிப்பட்ட நபர்களின் தகவல் பாதுகாப்பாக உள்ளது. அச்சம் வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Categories

Tech |