ஆந்திரா அன்னமையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துளசி பிரசாத். இவர் சிரிஷா என்ற பெண்ணை காதலித்து இருவீட்டார் சம்மததுடன் திருமணம் செய்து கொண்டார். மறுநாள் குடும்பத்தினர் முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்து, தம்பதியரை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முதலிரவு அறையில் எதிர்பாராதவிதமாக துளசி பிரசாத் சுயநினைவை இழந்து வீழ்ந்துள்ளார். பதறிப்போன சிரிஷா, குடும்பத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாகத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் போதும் நடக்கும் போதும் எந்த அளவுக்கு ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் தேவைப்படுகிறதோ அந்த அளவிற்கு உடலுறவின் போதும் தேவைப்படுகிறது. அதில் தடை ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமே ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் அதிகப்படியான பதட்டம், மன அழுத்தத்தை தவிர்த்தாலே இப்படியான மரணங்களை தவிர்க்கலாம் என்கின்றனர்.