துருக்கியில் உடல்நலம் சரியில்லாத தனது உரிமையாளருக்காக ஆறு நாட்கள் மருத்துவமனை வாயிலில் நாய் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டில் டிராப்ஸன் நகரில் வசித்து வருபவர் சென்டூர்க். இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மருத்துவமனைக்குச் செல்லும் போது நாயும் ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓடியுள்ளது.
இவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆறு நாட்கள் வரை அவர் மருத்துவமனையில் இருந்துள்ளார்.
அந்த 6 நாட்களும் நாய் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்துள்ளது. செண்டூர்க்கின் மகள் பல முறை நாயை வீட்டிற்கு அழைத்துச் சென்றாலும், மீண்டும் மருத்துவமனைக்கே ஓடி வந்துள்ளது. வாசலில் எப்போது வருவார் என நாய் காத்திருந்த இந்த வீடியோக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.