தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததன் காரணமாக அவர் கடந்த ஜூலை 14ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை முடிந்த முதல் பஸ் ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஒரு வார காலத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Categories
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்…. ஒரு வாரம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுரை…….!!!!
