Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதலமைச்சரின் உத்தரவின்படி…. 16 லட்சம் மதிப்பீட்டில்…. இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்….!!

தமிழக அரசு சார்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 16 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 457 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 1,965 பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட 16லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமை தாங்கிய நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

அப்போது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களின் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில்  ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் சிவக்குமாரி, அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன், ராமநாதபுரம் தாசில்தார் ரவிசந்திரன், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி, ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் ஆகிய அரசு அதிகாரிகள் முன்னிலை வகித்துள்ளனர்.

மேலும் முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், ஒன்றிய குழுத்தலைவர்கள் பிரபாகரன், முகமது முக்தார், திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகர், மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தவ்பிக் அலி, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம், திமுக நகர செயலாளர் ராஜா, இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத்குமார், ராமேஸ்வரம் வீட்டு வசதி வாரிய சேர்மன் அயோத்திராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |