Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ? பாரதியாக நடிக்கும் அருண் விடியோவால் ரசிகர்கள் கேள்வி …!!

பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகின்றதா ? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை சீரியலில் பிரபலமானது பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக ரோஷினி ஹரிப்ரியன்  நடித்து வந்தார். சில காரணங்களால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் இந்த சீரியலை முடித்துவிடலாம் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் புதிய கண்ணம்மா கேரக்டராக வினுஷா நடிக்க தொடங்கினார்.

தற்போது பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் சிம்லா சென்று மீசை, தாடி எல்லாம் நீக்கி கெட்டப்பை மாற்றி உள்ளார். அதோடு நான் பாரதியை மறந்துவிட்டு நானாக இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகிறதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/CWv9jlPhP7I/?utm_medium=copy_link

Categories

Tech |