Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முடிவடைந்த மீன்பிடி தடை காலம்…. மீண்டும் கடலுக்கு செல்லும் மீனவர்கள்….!!!

மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்பிடிக்க  கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் படகுகளை பராமரிப்பது, வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை சீரமைப்பது போன்ற பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் கடலுக்கு சந்தோசமாக மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

Categories

Tech |