கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நேற்றுடன் வலுவிழந்த வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தென் தமிழக கரையோர பகுதியில் இருந்து கர்நாடக கடலோரப் பகுதி வரை மத்திய கிழக்கு அரபி கடலில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அக்டோபர் 26ஆம் தேதி வரை பல மாநிலங்களில் பலத்த மழை நீடிக்கும் எனவும், அதுவும் மாலை வேளைகளில் அதிக மழை பொழிவு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனால் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, கோட்டையம், இடுக்கி, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அக்டோபர் 25-ஆம் தேதி கோட்டையம், இடுக்கி, பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதிகள் அனைத்தும் அணைகளும் நிரம்பியுள்ள காரணத்தினால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது