Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முக்கிய இடங்களில் சோதனை…. கிலோ கணக்கில் இறைச்சி பறிமுதல்…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கோழி இறைச்சி, சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், மணப்பாறை, முசிறி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து 47 கடைகளிலிருந்து 138 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து விதிமுறைகளை மீறி கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |