உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.
டிஜிலாக்கர் மூலம் பான் கார்டு, ஆதார் கார்டு, வாகனங்களின் ஆர் சி புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளலாம். டிஜிலாக்கர் சேவையைப் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் Namaste or hi or Digilocker என்று டைப் செய்து ஆவணங்களை எழுதி பதிவிறக்கம் செய்யலாம்.