முகவரி கேட்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநரிடம் செல்போனை பறித்து சென்றுள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டம் பாலசுப்ரமணியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் அருண். இவர் பயணிகளை ஏற்ற சிலுவை நகர் சந்திப்பில் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அருணிடம் முகவரி கேட்டுள்ளனர். அருண் முகவரி சொல்ல முயற்சித்த பொழுது திடீரென மர்ம நபர்கள் அவரிடம் இருந்த கைபேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அருண். புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.