தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் .
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். அவர் வெளியிட்ட ஒரு போட்டோவில் முகம் முழுவதும் வீங்கி, கண்களில் நீர் வழிகிறது. அந்த போட்டோவில் ஸ்ருதிக்கு என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் குழப்பத்துடன் கெமெண்ட் செய்து வருகின்றனர். காய்ச்சல் மற்றும் சைனஸால் அவதிப்பட்டு வருவதாக ஸ்ருதி ஹாசன் அந்த போட்டோவில் குறிப்பிட்டுள்ளார்.