Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முகம் சிதைக்கப்பட்டு கிடந்த சடலம்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

முகம் சிதைந்து பிணமாக கிடந்த வாலிபரை கொன்ற வழக்கில் ஒருவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகில் சேகம்பாளையத்தில் இருக்கும் ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்துள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து மாரிமுத்துவை கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அருள்புரம் பகுதியில் பதுங்கியிருந்த ஒரு  வாலிபரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது  மது போதையில் ஏற்பட்ட தகராறில் உதயகுமார் தனது  நண்பரான  கார்த்தி என்பவருடன்  இணைந்து  மாரிமுத்துவின் தலையில்  கல்லால் அடித்து அவரை  கொன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் உதயகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர். மேலும்  இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும்  கார்த்தியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |