Categories
தேசிய செய்திகள்

முகப்பருக்களால் ஏற்படும் தழும்பு மறைய மாட்டேங்கிறா…? கவலையை விடுங்க… வாரம் ஒருமுறை இத ட்ரை பண்ணுங்க..!!

முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய வாரத்திற்கு ஒரு முறை வெந்தயத்தை கொண்டு பேஸ்ட் செய்து முகத்தில் போட்டால் முகப்பருக்கள் உடனே போய்விடும்.

முகப்பருக்கள் என்பது நமது அழகை கெடுக்கும் ஒரு கொடுமையான விஷயம். நம் உணவு காரணமாக முகப்பருக்கள் வருகின்றது. அது நம் அழகை கெடுக்கின்றது. இதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தீர்வு காண முடியும். அந்த வகையில் வெந்தயம் முகப்பருக்களை நீக்குவதில் மிகுந்த நன்மையை தருகிறது

முகப்பரு தழும்புகளை நீக்க நீங்கள் இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம்

வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும்.

பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி அதை முகத்தில் மாஸ்க் போட்டு கொண்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் மிகவும் நல்லது.

சுடுதண்ணீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து அதை முகப்பரு மீது தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.

Categories

Tech |