Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முகநூல் மூலம் அறிமுகமான வாலிபர்”…. வேலை வாங்கித் தருவதாக 1 1/2 லட்சம் மோசடி…. கைது செய்த போலீசார்….!!!!!!!!

முகநூல் மூலமாக அறிமுகமாகி அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ஒன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பர்மா காலனியைச் சேர்ந்த குமரேசன்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓரகட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் திண்டுக்கல் மாவட்டம் காசான் பட்டியை சேர்ந்த அர்ஜுன் பாண்டியன்(27) என்பவர் முகநூல் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர் தனக்கு அறநிலையத்துறையில் உள்ள உயர் அதிகாரிகளை தெரியும். பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக குமரேசனிடம்  கூறியுள்ளார். மேலும் தான் ஏற்கனவே இது போல பல பேருக்கு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை குமரேசனுக்கு அர்ஜுன் பாண்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனை உண்மை என நம்பிய குமரேசன் சிறிது சிறிதாக கூகுள் பே மற்றும் வங்கி கணக்கு மூலமாக ரூபாய் 1.69 லட்சம் வரை அர்ஜுன் பாண்டிக்கு அனுப்பியுள்ளார். பணத்தை வாங்கிய பின் அர்ஜுன் பாண்டி குமரேசனின் செல்போன் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். சொன்னபடி வேலை வாங்கிக் கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளார். இதனால்கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்ட குமரேசனை அர்ஜுன் பாண்டி மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல்லில் இருந்து அர்ஜுன் பாண்டியை கைது செய்து தாம்பரம் அழைத்து வந்துள்ளனர். அதன் பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை  சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |