Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முகநூலில் பகிர்ந்த வீடியோ…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சேடகுடிக்காடு கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் ரீதியான வீடியோவை முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முகநூல் நிறுவனம் மூலம் சென்னையில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |